தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மாத்தளையில் அமைக்க திட்டம்!

மாத்தளையில் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த பல்கலைக்கழக நிர்மாணிப்புக்காக மாத்தளையில் 20 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான நாலக பண்டார கோட்டகொட தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் நாடளாவிய ரீதியில்10 மாவட்டங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

சிறு ஏற்றுமதி திணைக்களக் காரியாலயம் அமைந்துள்ள பண்டாரபொல பிரதேசத்தில் இதற்கான காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாத்தளையில் காணப்படும் இயற்கை வளங்களை பயன்படுத்தி தொழில் நுட்பத்துறையில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களையும் நிபுணத்துவத்தையும் அளித்தல் போன்ற விடயங்கள் இப்பல்கலைக்கழகத்தின்மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.


Recommended For You

About the Author: Editor