சஹ்ரான் சுதந்திரமாக உலாவியதற்கு பொலிஸாரின் அலட்சியமே காரணம்

பொலிஸாரின் அலட்சியமே பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக உலாவியதற்கு காரணமென என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிபோது, ஆணைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் 2017ஆம் ஆண்டு பிடியாணை பெறப்பட்டிருந்த நிலையில், ஆர்மி மொஹிதீனை கைது செய்யாமைக்கு தேசிய உளவுச் சேவை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியன சமனான பொறுப்பினை ஏற்க வேண்டும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேநேரம், தேசிய உளவுச் சேவை தனக்கு தேவையான ஒத்துழைப்புகளை குறித்த விடயத்தில் வழங்கவில்லை எனவும் அந்த உளவுச் சேவை தனது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்றும் அவர் இதன்போது சாட்சியம் வழங்கினார்.


Recommended For You

About the Author: ஈழவன்