பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள்

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுடன் அது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக உள்ளீர்ப்பிற்கான 36 தேர்வுகளின் பெறுபேறுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் இம்முறை சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 10 ஆயிரம் மாணவர்கள் மேலதிகமாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்