இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தயாரா??

அதிக நிதி ஒதுக்கும் பட்டயில் 2ம் இடத்தில் இருக்கின்றது. மேலும், சீனா தனது தயாரிப்பு பொருட்களையும் அதிகரித்து வருகின்றது. இதனால் மற்ற நாடுகளை காட்டிலும், வெளிநாடுகளுக்கு அதிக உற்பத்தி செய்து வருகின்றது. மேலும், சீனா தனது வர்த்தக பயன்பாட்டிற்காக ராணுவத்தை வைத்து கடல் பகுதியிலும் ஆதிக்கம் செய்து வருகின்றது. மேலும், தனது நாட்டு போர் கப்பல்களையும் நிறுத்தி பிற நாடுகளையும் எச்சரிக்கை செய்து வருகின்றது.

சீனா- அமெரிக்கா மோதல்: 
ஏற்கனவே சீனாவுக்கும் அமெரிக்காவும் கடல் போக்குவரத்தால், மோதல் ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு சொந்தமாகவும் தீவுகள் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒரு சில தீவுகளை சீன ஆக்கிரமித்து வைத்துள்ளது. மேலும் வர்த்தகத்தில் சீனா தன்னை உயர்த்தி முதலாளித்துவ நாடாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவின் வர்த்த கப்பல் மீது சீனாவின் கப்பல் லேசாக மோதி விட்டு சென்றது. இதை திட்டமிட்டே சீனா அரங்கேற்றியதாக குற்றம்சாட்டியது.

கடல் பகுதியில் சீனா ஆதிக்கம்: 

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்த துடித்து வருகின்றது. இதற்காக தனது நிலையை விரிவு செய்து கொண்டே செல்கின்றது. மேலும், மற்ற நாடுகள் அருகே உள்ள பகுதிகளிலும் ஆக்கிரமிக்கும் வகையில் சீனா கடல் பகுதியில் செயல்பட்டு வருகின்றது. தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்த போர் நடந்து வருகின்றது. இதைபயன்படுத்தி மற்ற நாடுகளிடம் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க அமெரிக்கா புதிய முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இதற்கான அடுத்த நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளையும் கடற்படைகளை நவீன மாக்கவும் அமெரிக்கா புதிய திட்டத்தையும் தீட்டியுள்ளது.

இலங்கைக்கும் அச்சுறுத்தல்: 

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் இருப்பதால் இலங்கைக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான் நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளது. சீனாவின் ஆதிக்காத்தால் இலங்கையின் சுதந்திர தன்மையும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு ஆப்பு வைக்கும் இலங்கை: கொழும்புவில் சீனா அமைத்துள்ள சரக்கு முனையம் மற்றும் துறைமுகத்திற்கு அருகே இந்தியா, ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டுறவுடன் மற்றொரு புதிய சரக்கு முனையம் அமைப்பது குறித்தும் அங்கொரு துறைமுகத்தை நிறுவுவது குறித்தும் இந்திய, ஜப்பான் அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இத்துறைமுகத்தில் இலங்கையின் பங்கு 51 சதவீதமாக இருக்கும்.விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இலங்கையின் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor