ஸ்ரேயாஸ் அய்யருக்கு 12 லட்சம் அபராதம்

மெதுவாக பந்துவீசியதற்காக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இந்திய மதிப்பில் 12 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது. மெதுவாக பந்து வீசியதற்காக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் டெல்லி அணி செய்யும் முதல் தவறு என்பதால் அணியின் தலைவருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்