ஏமாந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் மண்ணைக் கவ்விய டெல்லி!

2020 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன் முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணி தன் பழைய திட்டத்தை வைத்து டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இனி மற்ற அணிகளையும் இதே திட்டத்தில் வீழ்த்த அந்த அணி முயற்சி செய்யும். மந்தமான ஆடுகளம் தான் தங்களின் கோட்டை என்பதை அந்த அணி மீண்டும் நிரூபித்துள்ளது.

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றன. லீக் சுற்றின் 11வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. ஹைதரபாத் அணி இந்த முறை தன் பழைய பாணியிலேயே ஆட முடிவு செய்தது.

இரண்டாவது போட்டியிலும் அதே போல ஆடி தோல்வி அடைந்து இருந்த அந்த அணி, மீண்டும் அதே திட்டத்துடன் களமிறங்கியது. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் போது ஹைதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்யும்

மந்தமான ஹைதரபாத் ஆடுகளத்தில் குறைந்த ரன்கள் எடுத்தாலும், எதிரணியை சேஸிங் செய்ய விடாமல் பந்துவீச்சில் கடும் அழுத்தம் கொடுத்து வெற்றி பெறும். அதே முறையை ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைமுறைப்படுத்தியது ஹைதரபாத்.

ஷார்ஜா தவிர மற்ற ஆடுகளங்களில் ரன் குவிப்பது கடினம் தான். இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வார்னர் தன் திட்டப்படி ஹைதரபாத் முதலில் பேட்டிங் செய்வதால் மகிழ்ந்தார்.

முதலில் பேட்டிங் செய்த ஹைதரபாத் அணி 162 ரன்கள் எடுத்தது. வார்னர் 45, பேர்ஸ்டோ 53, கேன் வில்லியம்சன் 41 ரன்கள் எடுத்தனர். அவர்கள் மூவருமே பெரிதாக அதிரடி ஆட்டம் ஆட முயலவில்லை. மாறாக விக்கெட்டை தற்காத்து ரன் குவிப்பதிலேயே கவனம் செலுத்தினர்.

162 ரன்கள் என்பது குறைவான ஸ்கோர் என்றே பலரும் கருதினர். ஆனால், ஆடுகளம் மந்தமாக இருப்பதால் உறுதியாக இருந்த வார்னர் ஹைதரபாத் அணியின் அதே பழைய பந்துவீச்சு திட்டத்தை அமல்படுத்தினார். ரஷித் கான் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட் வீழ்த்தினார்.

டெல்லி அணி 163 ரன்களை சேஸிங் செய்த போது தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தது. ஒரு கட்டத்தில் ரன் ரேட் அழுத்தத்தில் சிக்கி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வார்னர் தான் போட்ட திட்டத்தில் வெற்றி பெற்றார்.

முதலில் பேட்டிங் செய்து எதிரணியை ரன் ரேட் அழுத்தத்தில் ஆழ்த்தி வீழ்த்தும் திட்டத்தை இந்த சீசன் முழுவதும் ஹைதரபாத் செயல்படுத்த வாய்ப்பு உள்ளது. பந்துவீச்சு தான் இந்த திட்டத்தில் முக்கியம். சாதாரண பந்துவீச்சை கொண்டே ஹைதரபாத் தில்லாக இறங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor