மண்ணில் கலந்திருந்த மனித எச்சங்கள்!

மைதானத்தை நிரப்புவதற்காக எடுத்து வரப்பட்ட மண்ணில் மனித எலும்புக்கூடு மற்றும் மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேகாலையில் உள்ள மைதானம் ஒன்றை சீரமைக்க, தெரனியகல உடபொல பிரதேசத்தில் இருந்து மண் எடுத்து செல்லபட்டுள்ளது.?

இதேவேளை மைதானத்திற்காக எடுத்துவரப்பட்ட மண் கல்லறையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண்ணாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor