ஈஸ்டர் தாக்குதல் குறித்த எந்த தகவலும் எமக்கு கிடைக்கவில்லை – பிரதமர்

ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து எந்த உளவுத்துறை தகவலையும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு பெற்றுக்கொள்ளவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான சட்டங்கள் இயற்றப்படவில்லை என்பதுதான் தனது கருத்து என்றும் பிரதமர் கூறினார்.

அத்தோடு வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிராக புதிய சட்டத்தை நீதி அமைச்சு தயாரிக்கிறது என சுட்டிக்காட்டிய பிரதமர், பயங்கரவாதம் தொடர்பான தற்போதைய சட்டங்களை மீண்டும் தட்டிப்பார்ப்பதன் முக்கியத்துவத்தையம் இங்கு கோடிட்டுக்காட்டினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது.

இதில் முதலாவதாக இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன சாட்சியம் வழங்கியிருந்தார். இதன்பின்னர் அமைச்சர் சாகல ரத்னாயக்க சாட்சி வழங்கியிருந்த நிலையில் தற்போது பிரதமரும் சாட்சியம் வழங்கி வருகின்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்