ஹொங்கொங் எதிர்ப்பாளர்களுக்கு சீனா எச்சரிக்கை!

ஹொங்கொங்கில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வரும் போராட்டக்காரர்களுக்கு சீனா மிக வன்மையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நெருப்புடன் விளையாடுவது பின்னர் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று சீனா இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

ஹொங்கொங்கில் உள்ள சீனாவுக்கான உயர்மட்ட கொள்கை பரப்பு அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.

சீன மத்திய அரசாங்கத்தின் உறுதியான தீர்மானத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக ஒன்பது வாரங்களாக முன்னெடுக்கப்படும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை சீனா கண்டித்துள்ளது.

இந்தநிலையில், நேற்று விடுக்கப்பட்டிருந்த பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியது, மேலும் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.


Recommended For You

About the Author: Editor