ஊழியர்களுக்கு வேதனத்திற்கு பதிலாக ஹெரோயின் வழங்கல்

தனக்கு கீழ் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு வேதனத்திற்கு பதிலாக ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிவந்த தொழிலதிபர் தொடர்பிலான தகவல்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

அதுருகிரிய காவல்துறையினரின் நீண்டநாள் விசாரணைகளுக்கு பின்னர் இந்த விடயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமீபத்தில் ஹெரோயின் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரொருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக அவரது தாயாரும் 5 கிராம் ஹெரோயினுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர், நேற்றைய தினம் அந்த பெண்ணின் மூத்த சகோதரர் ஒருவரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர் மாலபே 10ஆவது மைல் கல் அருகில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டதா காவல்துறையினர் தெரிவித்தனர். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 500 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

இதனோடு குறித்த ஹெரோயின் விநியோக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு பாரவூர்திகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, தற்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இவர்கள் பழைய இரும்பு, போத்தல்கள் சேகரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் என தெரிவிக்கப்படுவதோடு, இவர்களிடம் பணியாற்றும் ஊழயர்களுக்கு சம்பளத்திற்கு பதிலாக ஹெரோயின் போதைப்பொருள் வழங்கியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


Recommended For You

About the Author: Editor