திலீபன் கொலையாளி என்கிறார் டக்ளஸ்

தியாகி திலீபன் ஒரு கொலையாளி என்றும் அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் மஹிந்த ராஜபக்ஷ இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய சந்திப்பின் போது, டக்ளஸ் தேவானந்தா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு மற்றும் உண்ணாவிரதம் குறித்து பிரதமரிடம் கேள்வியெழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த டக்லஸ் தேவானந்தா, திலீபன் ஒரு கொலையாளி. அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை. எனது தம்பியையும் அவர்தான் கடத்தி கொன்றார். அவரை வைத்து அரசியல் செய்கிறார்கள் என கூறினார்.


Recommended For You

About the Author: ஈழவன்