ரணிலின் அறிக்கை பொய்யானது.

ஊழலுக்கு எதிரான செயலகம், (ஏ.சி.சி.எஸ்) தேசிய செயற்குழுவின் (என்.இ.சி) அனுமதியுடன் நிறுவப்பட்டது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கை பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணையகத்தின் முன் நேற்று (திங்கட்கிழமை) சாட்சியமளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது,  “இதற்கு முன்னர் ஜனாதிபதி விசாரணை ஆணையத்தை (பி.சி.ஓ.ஐ.) நிறுவுவது, தேசிய செயற்குழுவின் ஒப்புதலுடன் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், ரணில் பங்கேற்ற தேசிய செயற்குழுவின் எந்தவொரு கூட்டத்தின்போதும் அத்தகைய ஸ்தாபனம் பற்றி எந்த விவாதமும் இருக்கவில்லை.

முன்னாள் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் நிஹால் ஜெயதிலகவால், ஜனாதிபதி விசாரணை ஆணையகத்துக்கு தயாரிக்கப்பட்ட ஆவணங்களை மதிப்பிடும்போது மட்டுமே அமைச்சரவை பத்திரத்தை பார்த்தேன்.

செயலகத்தை நிறுவுவது, தேசிய செயற்குழுவின் ஒப்புதலுடன் செய்யப்பட்டிருந்தால், அதை அதன் அப்போதைய தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்