இங்கிலாந்தில் சுய தனிமைப்படுத்தல் சட்டப்பூர்வமாகிறது!

இங்கிலாந்தில் சுய தனிமைப்படுத்தல் இன்று (திங்கட்கிழமை) முதல் சட்டப்பூர்வ கடமையாக உள்ளது.

கொவிட்-19க்கு நேர்மறையானதை சோதிக்கும் எவரும் அல்லது வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்பட்டால், அவர் சுய தனிமைப்படுத்தப்படல் வேண்டும்.

இதனை செய்ய மறுப்பவர்கள் அல்லது மீறுபவர்களுக்கு 10,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் அறிகுறிகளைக் கொண்ட 18 சதவீதம் பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு சென்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குளிர்காலத்தில் முன்னணி வரிசை தொழிலாளர்களுக்கு, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தடையின்றி வழங்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் நான்கு மாத கையிருப்புகள், முகக்கவசங்கள், முகமறைப்புகள் மற்றும் பாதுபாப்பு அங்கிகள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் நவம்பர் முதல் கிடைக்கும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor