பல கோடி பெறுமதியான அரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு

பொலன்னறுவை எலஹெர – பக்கமூன பெல்அத்துவாடி பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான நீல இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினக்கல் சுரங்கத்திற்குள் கருகற்களுக்குள் இந்த இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் நிறை இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகம் என கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கருங்கல்லுக்கு நடுவில் சிக்கியிருக்கும் இரத்தினக்கல் சுமார் 1000 கரட்டிற்கும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.

கருகல்லுக்குள் சிக்கிய நிலையில் இரத்தினக்கல் இருப்பது மிகவும் அரிதான விடயம் என சுரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor