ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஷானி அபேசேகர முன்னிலை!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

அவர் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பான வழக்கின் துப்பாக்கியை பொறுப்பேற்றமை தொடர்பான சாட்சியை மறைத்த குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த ஆணைக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோரும் இன்று முன்னிலையாகியுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor