பௌத்த மதகுருமார்கள் சென்ற ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு

பெலியட்ட என்னும் ஊரில் இருந்து வடக்கு- கிழக்கு ஆஸிர்வாதாத்மக பிரித் சுற்றுலா வருடம்தோறும் யாழ்.நோக்கி வருகை தந்து,  நன்கொடையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாடசாலை உபகரணங்கள், கர்ப்பிணித் தாய்மார்களுக்காக பொருட்கள் என்பனவற்றை வழங்கிச் செல்கின்றது.

இதனடிப்படையில் இந்த வருடமும் வெளி மாவட்டமான பெலியட்ட என்னும் ஊரில் இருந்து ஊர்காவற்துறை நோக்கி மதகுருமார்களும் நன்கொடையாளர்களுமாக சுமார் 520 பேரைக் கொண்ட ரயில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் வைத்து நன்கொடை பொருட்களை வழங்கிவிட்டு, அங்கிருந்து புறப்பட்ட ரயில், மாலை 5.15 மணி அளவில் மீசாலையை கடக்கும்போது இனந்தெரியாதவர்களால் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, உடனடியாக பளை ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு, தாக்குதலில் காயமடைந்த முதியவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

மேலும்,  சம்பவத்தில் காயமடைந்த முதியவருக்கு பளை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு , மீண்டும் அந்த  ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்