மோதலை தடுக்க முற்பட்ட காவல்துறை அதிகாரிக்கு கத்திக்குத்து!!

செந்தனியில் மோதல் ஒன்றை தடுக்க முற்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை பகல்1:40 மணிக்கு செந்தனி சந்தைக்கு அருகே இந்த மோதல் வெடித்துள்ளது.
சந்தைக்கு அருகே மூன்று நாபர்களுக்கு இடையே பலத்த மோதல் வெடித்தது.
ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டனர். குற்றவியல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த (BAC) அதிகாரி ஒருவர் இந்த மோதலை தடுக்க முற்பட்டுள்ளார்.
அப்போது எதிர்பாரா விதமாக அவர்கள் காவல்துறை அதிகாரியை தாக்கியுள்ளனர். கத்தி ஒன்றின் மூலம் அதிகாரியை குத்தியுள்ளனர்.
இதனால் பதில் தாக்குதல் நடத்த அதிகாரி தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
காயமடைந்த அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
மோதலில் ஈடுப்பட்ட ஏனைய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor