பிரித்தானியாவில் கொரோனாவின் தாக்கம்- நிபுணர் எச்சரிக்கை

பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை முற்றிலும் சாத்தியமானது என்று அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் உயர்மட்ட நிபுணர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ஊரடங்குகள் பிரச்சினையை குறைக்கும் என்று பிரித்தானியா அரசாங்கத்தின் வைரஸ் தொடர்பான ஆலோசனை குழுவில் இருக்கும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் பேராசிரியர் மார்க் வூல்ஹவுஸ் கூறினார்.

மூன்றாவது அலை முற்றிலும் சாத்தியமாகும். ஊரடங்கு நடவடிக்கை பிரச்சினையை தீர்க்காது, அது ஒத்திவைக்கிறது.

அதனால் தான் நமக்கு கொரோனாவை எதிர்த்து போராட சரியான தடுப்பூசி தேவை அல்லது மாற்றாக தடுப்பூசி ஆறு மாதங்கள், அல்லது 12 மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகளில் கிடைக்கப் போவதில்லை என்று நாம் நினைத்தால், நமக்கு மாற்று வழி தேவை என உயர்மட்ட நிபுணர் பேராசிரியர் மார்க் வூல்ஹவுஸ் கூறினார்.


Recommended For You

About the Author: Editor