உத்தரகாண்ட் விபத்தில் மாணவர்கள் பலி.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாடசாலை வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் தேக்ரி மாவட்டத்தில் உள்ள மந்தாகினி நகரை நோக்கி சென்ற பாடாசாலை வேன் ஒன்று பள்ளதாக்கொன்றில் சரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 மாணவர்கள் காயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்