யாழ்.மாநகரில் குற்றச்செயல்கள் நடந்தால் உடனே அறிவியுங்கள்!

வன்முறைக் கும்பல்களின் குற்றச்செயல்கள் இடம்பெற்றால் உடனடியாக தகவல் வழங்குமாறு யாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரில் இன்றைய தினம் திறந்திருந்த கடைகளின் உரிமையாளர்களை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஷான் பெர்னாண்டோ, இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதி, பெருமாள் கோவிலடியில் தனுரொக் என்று அழைக்கப்படும் இளைஞன் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலைச் சுட்டிக்காட்டிய அவர், அது போன்ற சம்பவம் இடம்பெற்றால் உடனடியாக தமக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இந்தச் சந்திப்பு ஒன்று சுமார் 10 நிமிடங்கள் இடம்பெற்றது என்று வணிகர்கள் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: ஈழவன்