ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே பதற்றம்!

சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனிய மற்றும் அஜர்பைஜான் படைகளுக்கு இடையே மோதல்கள் அதிகரித்துள்ளன.

இதன்போது அஜர்பைஜான் நாட்டுக்கு சொந்தமான உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் நாகோர்னோ-கராபாக் பிரிந்து சென்ற பகுதிக்கு அஜெரி படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஆர்மீனிய படைகள் அஜெரி இராணுவ மற்றும் பொதுமக்கள் நிலைகளில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டபட்டுள்ளது.

உயிரிழப்புகள் தெளிவாக அறிவிக்கப்படாத நிலையில் ஆர்மீனியாவின் பாதுகாப்பு அமைச்சு அஜர்பைஜான் படைகளால் குறிப்பிட்டுக் கூறமுடியாத எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

1994 இல் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும், அஜர்பைஜானும் ஆர்மீனியாவும் நாகோர்னோ-கராபாக் மற்றும் தனி அஜெரி-ஆர்மீனிய எல்லைப்புறங்களில் ஒருவருக்கொருவர் தாக்குதல்களை நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor