ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர ?

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திசாநாயக்க போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை எதிர்வரும் 18ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நாட்டிலுள்ள பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.

மேலும் இக்கட்சிகள் தங்களது கட்சி சார்பாக யாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்பதில் குழப்பநிலையிலேயே உள்ளன.

இந்நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்தி, அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் மற்றும் ஏனைய முக்கிய கட்சிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு தங்களுக்கான ஆதரவை திரட்டுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முனைவதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்