அமெரிக்காவில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்க திட்டம்!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உருவான திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நியூயோர்க் நகரில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 25 சதவீத திறனுடன் உட்புற உணவகங்கள் செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜூன் மாதம் முதல் வெற்றிகரமாக செயற்பாட்டில் உள்ள திறந்தவெளி உணவகங்களை விரிவுபடுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்பொருட்டு வாகன போக்குவரத்து இல்லாத தெருக்களை உருவாக்கி நடைபாதையில் பொதுமக்கள் உணவருந்தும் வகையில் பொது இடங்களை மறு வடிவமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor