முகம் கழுவச் சென்ற இளம் குடும்பஸ்தர் திடீரென மயங்கி உயிரிழந்தார்

முகம் கழுவுவதற்காக கிணற்றடிக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்த்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் யாழ்.தொண்டமனாறு பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில்  தொண்டமனாறு கடற்கரை வீதியில் வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரன் ஜோர்ஜ் (வயது-35) 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிணற்றடிக்குச் சென்ற அவர் மயங்கிச் சரிந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவரை உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மந்திகை வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor