வீட்டிற்குள் முடங்கினார் சம்பந்தன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பெரும் உடல்நலப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார் எனவும் இதனால் உடல் நிலை மிகப் பலவீனமாகியுள்ளதாக வீட்டுத் தகவல்கள் /தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களாக உடல் நலப்பாதிப்பிற்குள்ளான இரா.சம்பந்தன் கொழும்பிலுள்ள அவரது சொகுசு பங்களாவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதனால் நாடாளுமன்ற அமர்வுகளிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பந்தனின் உடல்நல குறைவால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் தெரிவு தாமதமாகி வருகிறது.

கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றம் கூடி, புதிய பேச்சாளரை தெரிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் சம்பந்தனின் உடல் நல குறைவினால் கூட்டம் நடைபெறவில்லை.

இன்றும் கூட்டம் நடப்பது சந்தேகமாகியுள்ளது, உண்மையில் வைத்தியரின் ஆலோசனையினால் சம்பந்தன் வரவில்லையா அல்லது வேறு யாரதும் ஆலோசனையால் சம்பந்தன் வரவில்லையா எனும் சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது.


Recommended For You

About the Author: Editor