யாழ்:பல்கலை மாணவர்கள் முழந்தாள் மண்டியிட்டு தியாக தீபத்திற்கு அஞ்சலி

யாழ்:பல்கலைக்கழக மாணவர்கள் முழந்தாள் மண்டியிட்டு தியாக தீபத்திற்கு அஞ்சலி

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் மக்களே!
தியாகதீபம் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
தமிழ் மக்களின் தேச விடுதலைக் கனவை சுமந்த அகிம்சை கோட்பாட்டாளன் அறவழியில் போராடி தன்னுயிர் துறந்த வரலாற்று நாள் இன்று.

காலப்பெருவெளியில் வரலாறு தன்னகத்தே அணைத்துக் கொண்ட பார்த்தீபனின் கனவு தமிழ் மக்களின் மனதில் பசுமரத்தாணிபோல் உருப்பெற்ற உன்னத நாளில் தமிழ் மக்கள் ஒன்றியம் தமது நெஞ்சப் பசுமையில் நிறுத்தி எமது மாவீரனுக்கு வீர வணக்கத்தையும், நினைவேந்தலையும் செலுத்திக் கொள்கிறது.

சனநாயகத்தின் மெழுகு பூசப்பட்ட அடக்குமுறை தேசத்தில் வாழ்ந்து வரும் ஆதிக் குடியொன்றின் பிள்ளைகள் அஞ்சலிக்கும் மறத் திருநாள் இன்று.

உலக வரலாற்றில் மறுக்கவோ மறக்கவோ முடியாத சாதனைகள் நிறைவேற்றிய சக்தியாக மாணவர்கள் விளங்கி வருகின்றனர்.

உள்ளக முரண்பாட்டை தோற்றுவிக்கும் இனவாத சக்திகளின் கூச்சலுக்கு மத்தியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் பசித்திருந்த பார்த்தீபனை நினைவு கொண்டமை அடக்குமுறைக்குள் விடுதலைக்கான ஒரு செய்தியாக நாம் பார்க்கிறோம்.

எமது மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் அபிலாசைகளை உள்வாங்கி தேசத்தைக் கட்டியெழுப்பும் உன்னத முயற்சினை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.

அந்த முயற்சிகளை நல்லிணக்க நிலைப்பாட்டில் முன்னெடுக்க வேண்டிய கடமையும்,தேவையும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள தரப்பு கவனத்தில் கொண்டு இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் என பார்த்தீபன் பசித்திருந்து பசியுடனே சென்ற நாளில் கோரிக்கை விடுகின்றோம்.

ஊர்கூடி உலகை வெல்வோம்.
தமிழ் மக்கள் ஒன்றியம்.
தலைமைச் செயலகம்.
A-09 நெடுஞ்சாலை, கிளிநொச்சி.
இலங்கை.


Recommended For You

About the Author: Editor