திலீபனின் படம் இருந்த பத்திரிகையை பறித்த பொலிஸ்

பத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் படம் இருந்ததை அவதானித்த பொலிஸார் அதனைப் பறித்தெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சாவகச்சேரி சிவன் கோயில் முன்றலில் உணவுத் தவிர்ப்புப் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் பத்திரிகை ஒன்றினை வாசித்துக் கொண்டிருந்தார். அந்தப் பத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் படம் இருந்தது.

அப்போது வந்த பொலிஸார் உத்தியோகத்தர் அந்தப் பத்திரிகையினை பறித்துச் சென்றார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதன் பின்னர் பத்திரிகையை பொலிஸ் உத்தியோகத்தர் திரும்பக் கொடுத்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்