யாழ்.பல்கலை மாணவர்களை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய இராணுவம்

யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

யாழ் பல்கலைகழக நுழைவாயிலில் கூடியிருந்த மாணவர்களை பல்கலைகழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு, பொலிஸார் அறிவுறுத்தயுள்ளனர்.

எனினும், மாணவர்கள் அதை மறுத்தபோது, பெருமளவு பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இன்று பல்கலைகழகத்தில் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் பொலிஸார் பல்கலைகழக நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் கறுப்பு உடையணிந்த மாணவர்கள் இன்று பகல் பல்கலைகழக நுழைவாயிலில் ஒன்றுகூடியிருந்தனர். இதன்போது அங்கு குவிந்த பொலிஸார் மாணவர்களை பல்கலைகழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு பணித்துள்ளனர்

எனினும், மாணவர்கள் அதை நிராகரித்தனர் இதனால், மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் உதவிக்கு இராணுவத்தினரும் அழைக்கப்பட்டுள்ளதாக அங்கு வத்த சில இராணுவத்தினர் மாணவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்


Recommended For You

About the Author: Editor