தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய துருப்புக்களால் சுட்டுக் கொலை!

தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக, தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ‘மிருகத்தனமான செயல்’ என பாதுகாப்பு அமைச்சகம் கண்டித்துள்ளது.

எல்லைக்கு அருகிலுள்ள ரோந்து படகில் இருந்து அந்த நபர் காணாமல் போயுள்ளதாகவும் பின்னர் வடக்கின் நீரில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சியோல் தெரிவித்துள்ளது.

வட கொரிய வீரர்கள் அவரை சுட்டுக் கொன்றனர், பின்னர் அவரது உடலில் எண்ணெய் ஊற்றி அவரை எரித்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும், இதுகுறித்து பியோங்யாங் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. வட கொரியா தனது எல்லைகளை கடுமையாக்கியுள்ளதுடன், கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க நாட்டிற்குள் நுழைபவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளதாக கருதப்படுகின்றது


Recommended For You

About the Author: Editor