அவுஸ்ரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் திடீர் மரணம்!

அவுஸ்ரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் (59 வயது) நேற்று (வியாழக்கிழமை) மாரடைப்பால் மரணமடைந்தார்.

டீன் ஜோன்ஸ், மும்பையில் இருந்தவாறு ஐ.பி.எல். போட்டிகளை வர்ணனை செய்துவந்த நிலையில் மும்பையில் ஹோட்டல் லாபியில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அவருடன் தங்கியிருந்த சக வர்ணனையாளரான பிரெட் லீ முதலுதவி அளித்தும் டீன் ஜோன்சைக் காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டீன் ஜோன்ஸ் திடீரென மரணமடைந்த செய்தி கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டீன் ஜோன்ஸ், அவுஸ்ரேலியவுக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன், 1986இல் இந்தியாவுக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்து பிரபல்யமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்