பெட்ரோல் கொள்கலன் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர்.

லோகோஜா-அபுஜா நெடுஞ்சாலையில் நேற்று பெட்ரோல் கொள்கலன் லொறி கட்டுப்பாட்டை இழந்து ஐந்து கார்கள், மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மோதியது.

இது ஒரு குடும்பத்தை ஏற்றிச்சென்ற ஐந்து கார்களில் ஒன்றில் விழுந்து தீப்பிடித்தது. பெட்ரோல் கொள்கலன் லொறி தீப்பிடித்து வெடிப்பதற்கு முன்பு காரில் விழுந்து கார் நசுக்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெடிப்பில் 23பேர் உயிரிழந்தாகவும், ஒரு குழந்தை காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் மத்திய வீதி பாதுகாப்பு கோகி மாநில துறை தளபதி இட்ரிஸ் ஃபிகா அலி உறுதிப்படுத்தினார். சம்பந்தப்பட்ட 10 வாகனங்களில் இருந்தவர்கள் உயிரிழந்தனர் என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து ஜனாதிபதி முஹம்மடு புஹாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய வீதி பாதுகாப்பு ஆணையத்தால் உறுதிப்படுத்தப்பட்ட 23பேரின் மரணம், நம் நாட்டிற்கு ஏற்பட்ட துயர சம்பவங்களின் மற்றொரு குழப்பமான மற்றும் சோகமான சம்பவத்தை பிரதிபலிக்கிறது

நாட்டில் இந்த துரதிர்ஷ்டவசமான மற்றும் பெரிய அளவிலான துயரங்களின் அதிர்வெண் குறித்து நான் தீவிரமாக கவலைப்படுகிறேன். இது தேவையற்ற மரணங்களை ஏற்படுத்துகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்