செல்வச்சந்நிதி ஆலயத்தில் 26ம் திகதி உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு!

எதிர்வரும் 26.09.2020ம் திகதி யாழ் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் காலை 8 தொடக்கம் மாலை 5 மணிவரை உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு .

28.09.20020 ம் திகதி திங்கட்கிழமை வடகிழக்கில் பூரண கர்த்தாலுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து தெரிவித்துள்ளார்கள்.

யாழில் கூடிய தமிழ்த் தேசிய அணிகள் தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பில் நேற்று மாலை கலந்துரையாடியிருந்தன.

இந்நிலையில் தியாகச் செம்மல் திலீபனுக்கு நினைவேந்தல் செய்ய நீதிமன்றம் இன்று பகல் தடையுத்தரவைப் பிறப்பித்தது.

இதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலும் தியாகத்தீபம் திலீபனை அனுஸ்டிக்கும் முகமாகவும் தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்றைய தினம் விசேட ஊடக சந்திப்பை நடத்தி மேற்படி உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.


Recommended For You

About the Author: Editor