1900 கிலோ கழிவு தேயிலை மீட்பு

உடுநுவர – வெலம்பொடை பிரதேசத்தில் கழிவு தேயிலையை ஏற்றிச் சென்ற லொறியொன்று வெலம்பொட பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது லொறியிலிருந்து 1,900 கிலோகிராம் கழிவு தேயிலை வெலம்பொட பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெலம்பொட பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட தேயிலையின் மாதிரி, தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெலம்பொட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor