15 நிமிடத்தில் தீயை அணைத்த வீரர்கள்..!!

கட்டிடப்பணிகளின் போது தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. தீயணைப்பு வீரர்கள் 15 நிமிடத்தில் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை Meudon (Hauts-de-Seine) நகரில் உள்ள Portes de Trivaux இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டிடப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த இத்தளத்தில், பணியாளர் ஒருவர் எரிவாயு குடுவையை பயன்படுத்திக்கொண்டிருந்துள்ளார். அதன்போது திடீரென எரிவாயு குடுவை பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதோடு, தீயும் பரவத்தொடங்கியது.

உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 15:40 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடினர். வெறும் 15 நிமிடத்தில் தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக Vélizy நகர் நோக்கிச் செல்லும் A118 நெடுஞ்சாலையில் சில நிமிடங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor