நகர மக்களின் தூக்கத்தை கெடுக்கும் விமானங்கள்!

தங்களின் இரவுநேர தூக்கத்தை விமான பேரிரச்சல்கள் கெடுப்பதாக Saint-Maur நகர மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

ஜூலை மாத ஆரம்பத்தில் இருந்து ஓர்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் Saint-Maur (Val-de-Marne) நகருக்கு மேலாக பறக்கின்றது.

காற்று வீசும் திசை காரணமாக Saint-Maur நகருக்கு மேலாக கடல் மட்டத்தில் இருந்து 650 மீற்றர் உயரத்தில் விமானங்கள் பறந்து, மேலெழுகின்றன.

இதனால் அந்நகரில் 80 டெசிபல்கள் (80 db) அளவு சத்தம் பதிவாகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த விமான இரைச்சல்கள், நள்ளிரவு தாண்டியும் தொடர்வதாகவும், நாள் ஒன்றுக்கு 600 விமாங்கள் வரை பறப்பதாகவும் அந்நகர மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஓர்லியில் அமைக்கப்பட்டுவரும் நான்காவது ஓடுதளத்தின் பணிகள் டிசம்பர் மாதத்தில் நிறைவு பெறும் என்பதால், டிசம்பர் 2 ஆம் திகதி வரை இந்த பிரச்சனை நீடிக்க வாய்புள்ளதாக அறிய முடிகிறது. 230,000 விமான சேவைகள் வருடத்துக்கு இடம்பெறுகின்றது. இதில் 3,000 சேவைகளின் நேரம் பகலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக விமானநிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor