பொருட்கள் விற்பனையில் இறங்கும் RATP…!!

இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்யும் புதிய வசதியினை தொடருந்து சேவை நிறுவனமான RATP மேற்கொண்டுள்ளது.

RATP தனது 70 ஆவது வருட பூர்த்தியை இவ்வருடத்தில் கொண்டாடுகின்றது. இதை முன்னிட்டு இந்த புதிய சேவையினை ஆரம்பித்துள்ளது. டி.சேர்ட்ஸ், தேநீர் கோப்பைகள், பைகள் என பலவித பொருட்களை இவர்கள் இணையமூடாக விற்க உள்ளனர். RATP சேவைகளை நினைகூரும் விதமாகவும், அடையாளப்படுத்தும் விதமாகவும் வாசகங்கள், ஓவியங்கள் கொண்ட இந்த பொருட்களை செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து விற்பனைக்கு கொண்டுவர உள்ளதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“RATP la ligne, Vintage, Subtilement des éléments graphiques de l’univers RATP என பல தலைப்புகளின் கீழ் மொத்தமாக 30 வித பொருட்களை விற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor