சாண்டியின் உண்மை முகத்தை சேனல் மறைக்கின்றது: கஸ்தூரி குற்றச்சாட்டு

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி இதுவரை முதல் வாரத்திலிருந்து எந்த வாரத்திலும் நாமினேஷனில் சிக்கவில்லை.

அவரை யாரும் இதுவரை நாமினேஷன் செய்ததாகவும் தெரியவில்லை.

சாண்டி பிக்பாஸ் வீட்டில் படு ஜாலியாக இருப்பது போல் தெரிந்தாலும், அனைவருடனும் நட்புடன் இருப்பது போன்று தோன்றினாலும் அவருடைய இன்னொரு முகத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேனல் ஒளிபரப்பு செய்யாமல் மறைத்துவிட்டதாக பிரபல நடிகை கஸ்தூரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது: விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக சாண்டி இருப்பதால் அவருடைய பாசிட்டிவ் பக்கத்தை மட்டுமே அந்த சேனல் ஒளிபரப்பு செய்து வருகிறது.

அவருக்கு நகைச்சுவை, ஜோக்குகள், டான்ஸ் தவிர இன்னொரு பக்கம் இருக்கின்றது. அந்த பக்கம் வெளிப்படும்போது அவர் வில்லனாக பார்க்கப்படுவார் என்று கஸ்தூரி கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் முகின், தர்ஷன் மட்டுமே இயல்பாக இருந்து வருவதாகவும், விரைவில் சாண்டியின் கோபமாக முகம் வெளியே வரும் என்றும் கஸ்தூரி கூறியுள்ளார்.

கஸ்தூரி கூறியது போல் சாண்டிக்கு இன்னொரு முகம் இருக்கின்றதா? அந்த முகம் எப்படி இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Recommended For You

About the Author: Editor