3 முறை ஆஸ்கார் வென்ற கலைஞரிடம் வாழ்த்து பெற்ற ‘இந்தியன் 2’ டெக்னீஷியன்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் இணைந்தவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு.

இவர் ஏற்கனவே ஷங்கரின் ‘எந்திரன்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரத்தினவேல் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வரும் இன்னொரு திரைப்படம் ‘Sarileru Neekevvaru’. மகேஷ் பாபு, ராஷ்மிகா மந்தனா, விஜயசாந்தி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை அனில்ரவிபுடி என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்காக ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் அவர்கள் தலைமையில் இந்த செட்டில் லைட்டிங் உள்பட அழகிய கலையம்சங்கள் கொண்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ரத்னவேல் தானே முன்னின்று கவனித்து வந்த இந்த செட்டை பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ராபர்ட் ரிச்சர்ட்சன் என்பவரை அழைத்து வந்து காண்பித்துள்ளார்


Recommended For You

About the Author: Editor