
அரசியல் உலகில் ‘ஆன்மீக அரசியல்’ என்ற புதுமையான ஒன்றை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகம் செய்து வைத்த நிலையில் தற்போது திரையுலகில் ‘ஆன்மீக ஆக்சன்’ என்ற புது டிரெண்டை இரண்டு பிரபலங்கள் அறிமுகம் செய்ய உள்ளனர். அவர்கள் விஷால் மற்றும் சமுத்திரக்கனி என்பது குறிப்பிடத்தக்கது.
சமுத்திரக்கனி இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் ஒரு ஆன்மீக ஆக்சன் திரைப்படம். சிவம் என்ற ஆன்மீக கதையை படித்த சமுத்திரகனி இந்த கதையில் விஷால் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் கதையை கூறியுள்ளார். விஷாலுக்கும் இந்த கதை பிடித்து விட, உடனே அந்த கதையை திரைப்படமாக்க உரிமை பெற்றுள்ளாராம் சமுத்திரக்கனி. இதனை அடுத்து சமுத்திரக்கனி – விஷால் இணைந்து உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
விஷால் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் சமுத்திரக்கனியுடன் இணைந்து ஆன்மீக ஆக்சன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது