காஜல் அகர்வால் படத்திற்கு சென்சார் சிக்கல்

பிரபல நடிகை கஜல் அகர்வால் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த ‘கோமாளி’ திரைப்படம் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் அவர் நடித்த மற்றொரு படமான ‘பாரீஸ் பாரீஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் இந்தப் படம் சமீபத்தில் சென்சாருக்கு சென்றபோது சென்சார்போர்டு அதிகாரிகள் பல ஆடியோ, வீடியோ வெட்டுக்கள் மட்டும் காட்சி இருட்டடிப்புக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இதனை மறு பரிசீலனை செய்வதற்கு ஏதுவாக ரிவைஸிங் கமிட்டியின் பார்வைக்கு எடுத்துச் செல்ல இந்த படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

காஜல் அகர்வால் நடித்த ‘பாரிஸ் பாரிஸ்’ திரைப்படம் பாலிவுட்டில் வெளியான ‘குயின்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

கன்னடம் மற்றும் மலையாளத்தில் இந்த படத்திற்கு எந்த வெட்டும் இல்லாமல் சென்சார் கிடைத்த நிலையில், தமிழ் ரீமேக் படத்துக்கு மட்டும் சென்சார் போர்டு பல நிபந்தனைகளை விதித்து இருப்பது தயாரிப்பு தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor