நல்லூர் கந்தனுக்கு வந்த சோதனை!!

வேல் கொண்டு வினை தீர்க்கப் புறப்பட்ட கந்தன் “யாமிருக்கப் பயமேன்” என்றான்.

ஆனால் இன்றோ….
கந்தக தீயிலே எம்மினம் வேள்வியாக காரணமான அந்த கைகளே ஆயுதம் தரித்து கந்தா உன்னையும் உன் பல கோடி அடியவர்களையும் காக்கவென புறப்பட்டு யாமிருக்கப் பயமேன் என்று எக்காளமிடுகிறார்கள். இதனை என்னவென்று சொல்வது….

கடவுளின் பெயரால் மனிதனை நல்வழிப்படுத்த தோன்றிய மதங்கள் இன்று கடவுளைக் காக்க ஆயுதம் தரித்த இராணுவ, பொலீஸ் பாதுகாப்பு.

நல்லூரானுக்கு நாளைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தினை முன்னிட்டு இன்று காலை முதல் நல்லூர் ஆலயத்தினை சூழவுள்ள பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

A9 வீதியில் நாவற்குழி மற்றும் செம்மணியில் ஹயேஸ் ரக வாகனங்கள் சோதனையிடப்பட்டே யாழ்ப்பாணத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

கோயிலிற்கு செல்லும் பக்த அடியார்களும் பூரண பரிசோதனையின் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

மக்களை வேண்டுமென்றே பீதிக்குள் தள்ளும் இத்தகைய செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.


Recommended For You

About the Author: Editor