அமெரிக்காவில் நாடளாவிய ரீதியாக துக்கம் அனுசரிப்பு!!

அமெரிக்காவில் நாடு முழுவதும் அடுத்த ஐந்து நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

13 மணி நேரங்களுக்குள் அமெரிக்காவின் இரண்டு மாநிலங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

முன்னதாக டெக்சாஸ் மாநிலம் எல் பாஸோ (El Paso) நகரில் உள்ள பேரங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

அந்தத் தாக்குதலை நடத்தியவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

இனவாத வெறுப்பு காரணமாக அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். அதேவேளை, ஒஹியோவில் உள்ள கேளிக்கைக் கூடத்தில் நேற்றுப் பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

24 வயதான கோனர் பெட்ஸ் (Connor Betts) என்பவர் அந்தத் தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். அதில் அவருடைய சகோதரி உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். இருபத்து ஆறு பேர் காயமடைந்தனர்.

பொலிஸாரின் பதில் தாக்குதலில் பெட்ஸ்ஸூம் உயிரிழந்தார். தாக்குதலுக்கான காரணம் என்ற என்பது பற்றிய விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.


Recommended For You

About the Author: Editor