இன்று ஆரம்பமாகிறது கண்டி எசலா பெரஹரா!

உலகின் மிகவும் பழமையான மத விழாக்களில் ஒன்றான கண்டி எசலா பெரஹரா ஊர்வலம்  நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகி உள்ளது.

இந்நிகழ்வினை கண்டுகளிக்க பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று ஆரம்பமாகும் இந்த திருவிழாவானது எதிர்வரும் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 1000 இற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் மற்றும் சுமார் 50 யானைகள் இதில் கலந்து கொள்கின்றன.

அத்துடன், பொலிஸ், முப்படை, விஷேட அதிரடிப்படை ஆகியன கூட்டாக இணைந்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.

இதற்கமைய வீதி தடைகளுடன் நகரத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் நிலையான கண்காணிப்பு தொடந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் தலதா மாளிகை மற்றும் நகரத்தை சூழவுள்ள பிரதேசங்களில் சிறப்பு சோதனைகள் மற்றும் நடமாடும் சோதனைச் சாவடிகள் என்பன ஏற்படுத்தப்படவுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் மூலமான ரோந்துப்பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.


Recommended For You

About the Author: Editor