யாழ் நல்லூரில் தேடுதல் நடவடிக்கைகள்!!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய சூழலில் உள்ள குடியிருப்புக்கள், வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று முதல் இவ்வாறு விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்லூர் ஆலய சூழலில் வசிப்பவர்கள் மற்றும் தொழில் நிமிர்த்தம் வருகை தருவோர் தொடர்பாக உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோன்று நல்லூரில் பெருமளவான பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதுடன் சிவில் உடை தரித்த பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்


Recommended For You

About the Author: Editor