கொழும்பில் ஏற்படவுள்ள பிரமாண்ட மாற்றம்!

கொழும்பு சர்வதேச நிதி நகரத்தில் முதலாவது கட்ட நிர்மாணப் பணிகள் 2023ம் ஆண்டில் நிறைவடையும் என்று திட்டத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் தலைமை அதிகாரி கஸ்யப்ப செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

காணிகளை நிரப்பும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. 3 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக கடல் நீர்த் தடை நிர்மாணிப்பதில் 99 சதவீதமான பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

கொழும்பு சர்வதேச நிதி நகரத்தில் நிர்மாணிக்கப்படும் நிலப்பரப்பு இலங்கைக்கு உட்பட்ட நிலப்பரப்பாகப் பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட இருப்பதாகவும் செனவிரத்ன மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பு சர்வதேச நிதி நகரத்தின் நிரமாணப் பணிகளுக்காக 130 கோடி அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் தற்பொழுது முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக திட்ட ஆலோசகர் பேராசிரியர் சமித்த மானவடு தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

கொழும்பு டி.ஆர்.விஜேவர்த்தன மாவத்தையில் 7, ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட இதன் உயரம் 356 மீற்றர்களாகும். வர்த்தக நடவடிக்கைகளுக்காக கோபுரத்தின் கீழ் பகுதியில் 3 மாடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மாடியின் மேற்புறத்தில் எட்டில் இரண்டு பகுதி வானொலி மற்றும் தொலைக்காட்சி கோபுரங்களின் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு மாடிகள் வைபவங்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு மாடியில் 400 பேர் ஒரே தடவையில் அமரக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. 250 வாகனங்கள் தரித்து நிற்பதற்கான வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.


Recommended For You

About the Author: Editor