
நியூஸிலாந்து பள்ளிவாசலில் தீவிரவாதி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலின் பின்னர் உலகம் முழுவதும் மிக பிரபலமாக பேசப்பட்டவர்களில் அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு பொலிஸ் துறை (பெண்)உயரதிகாரி இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்!
தீவிரவாத தாக்குதலின் பின்னர் நைலா ஹஸன் எனும் நியூஸிலாந்து பொலிஸ் உயர் அதிகாரியின் உருக்கமான பேச்சு உலகத்தாரை பெரிதும் ஈர்த்திருந்தது.
இந்நிலையில், குறித்த முஸ்லிம் பெண் பொலிஸ் உயரதிகாரியான நைலா ஹஸனுக்கு சவூதி மன்னர் சல்மான் இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற தனது சிறப்பு அதிதியாக அழைத்திருந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நைலா ஹஸ்ஸன் தற்போது புனித பூமியில் அதன் பாக்கியங்களை பெற்றுக்கொண்டிருக்கிறார்.