சாலிந்த திசாநாயக்க சுகவீனம் காரணமாக உயிரிழப்பு

குருநாகல் மாவட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க 61 ஆவது வயதில் காலமானார்.

சுகவீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த அவர் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் காலமானார்.

1958 ஆம் ஆண்டு மே 01 ஆம் திகதி குருணாகலில் பிறந்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த 1994 இல் முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

2000 – 2001 காலப் பகுதியில் காணி அபிவிருத்தி மற்றும் சிறு ஏற்றுமதி விவசாய உற்பத்திகள் அமைச்சராகவும், 2004 – 2007 காலப் பகுதியில் நதிப் படுகை மற்றும் ரஜரட்ட அபிவிருத்தி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்தோடு 2007 – 2010 காலப் பகுதியில் தெங்கு அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் 2010 – 2015 காலப் பகுதியில் பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்