
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் காஸீமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற தடைசெய்யப்பட்ட ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பின் அமைப்பின் மூன்று உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் இன்று (திங்கட்கிழமை) அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் உட்பட இருவர் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை பயங்கரவாதி சஹரானுடன் நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் நேற்று ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 113 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.