வெள்ளவத்தை மோதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்.

வெள்ளவத்தை பகுதியில் நேற்று இரவு 10.45 மணியளவில் இடம்பெற்ற மோதல் நிலை தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கட்டுமான நிறுவனம் ஒன்றின் ஊழியர்களுக்கும் அப்பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பாளர்களுக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பிலும் மதுபோதையில் இருந்த நபர்களினால் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோதலின் போது 150க்கும் அதிகமான பிரதேசவாசிகள் குழுமியிருந்தாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர, அவர்களை கலைப்பதற்காக கண்ணீப்புகை பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த மோதலின் போது, முச்சக்கரவண்டிகள் 7, மோட்டார் சைக்கிள் மற்றும் வான் ஆகியவற்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 9 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நேற்று இரவு சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்