முக்கொலையாளியை தேடும் சுழியோடிகள்.

கனடாவில் மூன்று பேரைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய இளைஞர்களைத் தேடுவதற்காக மனிடோபா (Manitoba) வட்டாரத்திலுள்ள ஆற்றுக்கு சுழியோடிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

19 வயது கெம் மக்லியோட்டையும் (Kam McLeod) 18 வயது பிரையர் ஷுமெகல்ஸ்கியையும் (Bryer Schmegelsky) சுழியோடிகள் நெல்சன் ஆற்றில் தேடவுள்ளனர்.

அந்த ஆற்றின் ஓரமாக சேதமடைந்த படகு ஒன்று கரையொதுங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுழியோடிகள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த லுகஸ் ஃபௌலர் (23 வயது), அமெரிக்காவைச் சேர்ந்த சைனா டீஸ் (24 வயது) ஆகியோர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உயிரிழந்தமை தொடர்பில் மக்லியோட்டையும், ஷுமெல்ஸ்கியையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

அதேவேளை, 64 வயது மதிக்கத்தக்க கனேடியரான லெனர்ட் டைக்கைக் கொலை செய்ததாக குறித்த இளைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த இளைஞர்கள் ஏற்கனவே இறந்திருக்கக்கூடும் அல்லது தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொண்டு தப்பியிருக்க சாத்தியம் உள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்